நாட்டை உலுக்கிய கொடூரம்; துரியோதனன் நிலைதான் மோடிக்கு - கே.எஸ்.அழகிரி கொந்தளிப்பு!
மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம்
சென்னை காமராஜர் அரங்கத்தில் 'கக்கன்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ரியோதனன் ஆட்சியில் கூட துயில் உரிய முயற்சித்தார்கள்.
ஆனால் பாஞ்சாலியை முழுமையாக நிர்வாணமாக்கவில்லை. ஆனால் மோடி ஆட்சியில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டுள்ளனர். டெல்லியில், காமுகர்கள் செய்த வெறிச்செயல்களை பார்த்து இருக்கிறோம்.
காங்கிரஸ் கண்டனம்
ஆனால் இங்கு இனவெறியில் அவமானப்படுத்த வேண்டும் என்று பெண்மையை இழிவு படுத்தி கேவலப்படுத்தி உள்ளார்கள். இதற்கு அரசிடம் இருந்து மிகக் கடுமையான பதில் வேண்டாமா? இதைத்தான் இன்று இந்தியா எதிர்பார்க்கிறது.
உலகமும் எதிர்பார்க்கிறது பிரதமர் மோடி இதற்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என காட்டம் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று அனைத்து தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.