பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற கொடூர வீடியோ; மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை - முதல்வர் உறுதி!

Narendra Modi Manipur
By Sumathi Jul 20, 2023 10:34 AM GMT
Report

மணிப்பூர் முதல்வர் வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் வன்முறை

மணிப்பூரில் குகி பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த வீடியோவை கண்ட மனித உரிமை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, பிரதமர் மோடி மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது. எனது இதயம் கனத்துள்ளது.

வலுக்கும் கண்டனங்கள்

இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம் என்றும், குற்றறவாளிகள் தப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அம்மாநில முதல்வர பைரன் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"நேற்றைய தினம் வெளிவந்த துயரமான வீடியோவில் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீடியோ வெளியான உடனேயே, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கையில் இறங்கி இன்று காலை ஒருவரை கைது செய்துள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.\

பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற கொடூர வீடியோ; மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை - முதல்வர் உறுதி! | Manipur Violence Womens Stripping Naked Details

மேலும் குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம். நம் சமூகத்தில் இது போன்ற கேவலமான செயல்களுக்கு இடமே இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இந்த வீடியோவை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கும், சமூக ஊடகங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.