நாட்டை உலுக்கிய சம்பவம்; உச்சநீதிமன்றமே தலையிடும் - எச்சரித்த தலைமை நீதிபதி!

Supreme Court of India Manipur
By Sumathi Jul 20, 2023 07:04 AM GMT
Report

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் உச்சநீதிமன்றம் தலையிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறை

மணிப்பூரில் குகி பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட

நாட்டை உலுக்கிய சம்பவம்; உச்சநீதிமன்றமே தலையிடும் - எச்சரித்த தலைமை நீதிபதி! | Manipur Viral Video Take Action Supreme Court

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மணிப்பூரில் நடந்தது மனிதத்தன்மையற்ற செயல் என்றும், ஜனநாயகத்தில் இதுபோன்ற சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. உலகம் முழுவதும், சண்டைகள் நிறைந்த பகுதிகளில் பெண்கள் வன்முறைக் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.

நீதிபதி வேதனை

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும் என்றும் கூறி விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.