இது தான் என்னோட ஒரே கனவு !! சொந்த மண்ணில் மனம் திறந்த பிரதமர் மோடி
ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் நாடு விரும்புவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மோடி பிரச்சாரம்
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், வரும் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டின் தலைவர்கள் பிரச்சாரகளத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
பிரதமர் மோடி, நாடெங்கிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார். குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி குஜராத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக கூறி, இந்த தேர்தலில் ஆனந்த் மற்றும் கெடா மாவட்ட மக்கள் எல்லா சாதனைகளையும் முறியடிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தான் துடிக்கிறது
நாட்டிற்கு சேவை செய்ய 2014 ஆம் ஆண்டு தன்னை அனுப்பியதாக குறிப்பிட்ட அவர், நாட்டிற்கு தனக்கு ஒரே ஒரு கனவு இருக்கிறது என்றும் அது 2047-இல் நாடு சுதந்திரமடைந்து 100-வது ஆண்டின் போது, இந்தியா "வளர்ச்சியடைந்த பாரதம்" ஆக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது நாட்டில் காங்கிரஸ் பலவீனடைந்து வருவதாக குறிப்பிட்டு, இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது - அங்கே பாகிஸ்தான் அழுகிறது என்றும் தெரிவித்தார்.
தற்போது பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசுக்காக பிரார்த்தனை செய்து வருவதாக கூறி, இளவரசரை என ராகுலை குறிப்பிட்டு, அவரை பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது என்றும் சாடினார். மேலும், பாகிஸ்தான் நாட்டிற்கும் காங்கிரஸ் கட்சி இடையே இருக்கும் கூட்டு தற்போது முற்றிலுமாக அம்பலமாகிவிட்டதாக தெரிவித்த அவர், இவர்களின் கூட்டு நமக்கு முன்பே தெரியும் என்றும் கூறினார்.