பாஜக இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது - பிரதமர் மோடி
மாநிலத்தின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் மத்திய அரசு உழைப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மோடி
ஜார்க்கண்ட் மாநிலம் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, ரூ.83,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதன் பின் ஹிசாரிபாக் நகரில் பாஜக சார்பில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இடஒதுக்கீடு
அங்கு பேசிய அவர், "மாநிலத்தின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் மத்திய அரசு உழைக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பெரிய தடையாக உள்ளனர்.
ஜார்க்கண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்ததும், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களின் இடஒதுக்கீட்டைப் பறிக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் பாஜக இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது" என பேசியுள்ளார்.