பாஜகவில் இணைந்த கவுன்சிலர்கள் - மாட்டு மூத்திரம் குடிக்க வைத்த எம்எல்ஏ

BJP Rajasthan
By Karthikraja Sep 27, 2024 11:52 AM GMT
Report

புதிய மேயர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பாஜக எம்எல்ஏ மாட்டு மூத்திரம் கலந்த நீரை வழங்கியுள்ளார்.

பாஜகவில் இணைவு

ஜெய்ப்பூர் மாநகராட்சி மேயர் முனேஷ் குர்ஜருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவரை மேயர் பதவியில் இருந்து பாஜக நீக்கியது. 

bjp jaipur mla Balmukund Acharya

இவருக்கு பதிலாக குசும் யாதவ் என்பவரை மேயராக நியமித்தது. மேலும் 7 காங்கிரஸ் கவுன்சிலர் மற்றும் ஒரு சுயேச்சை கவுன்சிலர் பாஜகவில் இணைந்தனர். 

நானே 15 ஓட்டுகள் போட்டேன் - வைரலாகும் பாஜக பிரமுகரின் வீடியோ

நானே 15 ஓட்டுகள் போட்டேன் - வைரலாகும் பாஜக பிரமுகரின் வீடியோ

மாட்டு மூத்திரம் கலந்த நீர்

இந்நிலையில் மேயராக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஹவா மஹால் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பால்முகுந்த் ஆச்சார்யா, மாட்டு மூத்திரத்தில் கங்கை நதியின் நீரை கலந்து புதிதாக இணைந்த கவுன்சிலர்கள் மீது தெளித்தார். அந்த நீரை அவர்கள் முகத்தில் தடவி கொண்டனர். 

bjp jaipur mla Balmukund Acharya

மேலும் மாநகராட்சி கட்டிடம் முழுக்க அதை தெளித்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, "இதை தெளிப்பதன் மூலம், இங்கு உள்ள அசுத்தங்கள் நீங்கி தூய்மையாக்கப்பட்டது. மேலும் மேயர் பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் குடிக்க இந்த நீர் வழங்கப்பட்டது.

எங்கள் கலாச்சாரப்படி ஏதேனும் தவறு செய்தால் இந்த நீரை பருகுவதன் மூலம் அவர்களின் பாவம் நீங்கி தூய்மையடைவார்கள்.எனது காரில் எப்போதும் இந்த நீரை உடன் வைத்திருந்து தினமும் அருந்துவேன்" என தெரிவித்துள்ளார்.