நானே 15 ஓட்டுகள் போட்டேன் - வைரலாகும் பாஜக பிரமுகரின் வீடியோ

BJP Madhya Pradesh
By Karthikraja Aug 31, 2024 02:27 PM GMT
Report

15 ஒட்டு போட்டேன் என பாஜக பிரமுகர் கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மக்களவை தேர்தல்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜக கூட்டணி 293 இடங்கலில் வெற்றி பெற்று மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. 

modi as pm

இந்த தேர்தலில் பா.ஜ.க-வினர் கள்ள ஓட்டுப்போட்டதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. ஆனால் அதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

லதா வாங்கடே

இந்நிலையில் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் தான் 15 ஒட்டு போட்டதாக பாஜக பிரமுகர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநில சாகர் மக்களவை தொகுதி பா.ஜ.க எம்.பி. லதா வாங்கடே அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். 

அவருக்கு வரவேற்பு அளிக்க அங்கு வந்திருந்த பா.ஜ.க தொண்டர்கள் எம்.பி.யை சூழ்ந்து கொண்டு பேசினர். அதில் ஷிரோனி பா.ஜ.க எம்.எல்.ஏ.உமா காந்த்தின் பிரதிநிதி ஒருவர், `மேடம் நாங்கள் காங்கிரஸ் பூத் ஏஜெண்ட் யாரையும் 13 வாக்குச்சாவடிக்குள் விட வில்லை’ என்று தெரிவித்தார்.

15 ஓட்டு

அருகில் நின்ற பா.ஜ.க கவுன்சிலரின் கணவர் மகேஷ் என்பவர், `நான் மட்டும் 15 ஓட்டுப்போட்டேன்’ என்று தெரிவித்தார். அனைவர் முன்னிலையில் கள்ள ஓட்டுப்போட்டேன் என்று கூறியதை கேட்ட பா.ஜ.க எம்.பி. செய்வதறியாது திகைத்து உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். 

ஆனால் கள்ள ஓட்டுப்போட்டு இருப்பதை வெளிப்படையாக பா.ஜ.க-வினர் ஒப்புக்கொண்டிருப்பதால் சாகர் தொகுதி தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாஜகவினரே எம்.பியிடம் கள்ள ஒட்டு அளித்ததை வாக்குமூலமாக கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.