மகாத்மா காந்தி இதனால்தான் காங்கிரஸை கலைக்க விரும்பினார் - மோடி பேச்சு
இஸ்லாமியர்கள் மனதில் காங்கிரஸ் அச்ச உணர்வை உருவாக்கி வருவதாக மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா திட்டங்கள்
மகாராஷ்டிராவில் ரூ.7,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.
இதன் பேசிய அவர், "மகாராஷ்டிரா வரலாறு காணாத வேகத்தில் வளர்ந்து வருகிறது. இன்று மகாராஷ்டிராவுக்கு 10 மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்படுகின்றன. மேலும் நாக்பூர், ஷீரடி விமான நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
மராத்தி செம்மொழி
மராத்தி மொழிக்கு 'செம்மொழி' அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் கோடிக்கணக்கான மராத்தி மக்களின் பல ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. இந்த பணி உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தால் முடிந்தது.
நேற்று ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்கது. ஹரியானா, நாட்டின் மனநிலையை பிரதிபலித்துள்ளது.
மகாத்மா காந்தி
பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த கட்சியான காங்கிரஸ், இப்போது மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது. ஒவ்வொரு நாளும், மக்கள் மனதில் வெறுப்பு விதைகளை விதைக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, மகாத்மா காந்தி காங்கிரஸின் மோசமான நோக்கங்களை உணர்ந்தார். அதனால்தான் அவர் கட்சியை கலைக்க விரும்பினார்.
காங்கிரஸின் நகர்ப்புற நக்சலைட்டுகள், பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடையே பரப்புவதில் மும்முரமாக இருந்தனர். ஆனால் காங்கிரஸின் சதிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுவிட்டன. இடஒதுக்கீட்டைப் பறிப்பதன் மூலம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியைப் பிரிக்க விரும்புவதை தலித்துகள் உணர்ந்தனர்.
முஸ்லிம்கள் மனதில் அச்ச உணர்வை காங்கிரஸ் உருவாக்கி வருகிறது. இந்துக்களில் ஒரு சாதியை இன்னொரு சாதிக்கு எதிராகப் போராட வைப்பதுதான் காங்கிரஸின் கொள்கை. முழுக்க முழுக்க வகுப்புவாத மற்றும் சாதிய அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறது" என பேசியுள்ளார்.