நகர்ப்புற நக்சல்களால் காங்கிரஸ் இயக்கப்படுகிறது - மோடி குற்றச்சாட்டு
நகர்ப்புற நக்சல்களால் காங்கிரஸ் இயக்கப்படுவதாக மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மோடி
மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானே பகுதிகளில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு இன்று(05.10.2024) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
மகாராஷ்டிராவின் வாஷிம் நகரில் நடைபெற்ற விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைக்கான திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
காங்கிரஸ்
பிரதமர் மோடி தனது உரையில், "இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்துவதில் பஞ்சாரா சமூகம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியைப் போலவே, காங்கிரஸ் குடும்பமும் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரை தங்களுக்குச் சமமாக கருதுவதில்லை.
அதனால்தான் அவர்கள் எப்போதும் பஞ்சாரா சமூக மக்களை இழிவுபடுத்தும் மனப்பான்மையை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.
நகர்ப்புற நக்சல்
நகர்ப்புற நக்சலைட்டுகளால் காங்கிரஸ் இயக்கப்படுகிறது. நாம் ஒன்றிணைந்தால், தங்களது திட்டம் தோல்வியடையும் என்பது காங்கிரசுக்கு தெரியும். இந்தியாவுக்காக நல்ல எண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எவ்வளவு நெருக்கமாக நிற்கிறது என்பதை அனைவரும் பார்க்கலாம்.
டில்லியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதில் முக்கிய குற்றவாளி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் விரும்புகிறது." என பேசியுள்ளார்.