தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - என்ன காரணம் தெரியுமா?
இந்திய பிரதமர் மோடி அக்டோபர் 6 ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.
விமானப்படை தினம்
இந்திய விமானப்படை 1932 ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 92-வது இந்திய விமானப்படை தினத்தையொட்டி, அக்டோபர் 6 ஆம் தேதி காலை 11 மணிமுதல் மதியம் 2 மணி வரை பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
மோடி வருகை
இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகைகள் கடந்த ஒரு வாரமாகவே நடைபெற்று வருகிறது.
இந்த விமானப்படை சாகச நிகழ்வில், ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை ஈடுபட உள்ளன. மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய பெருமைவாய்ந்த பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்து வகை விமானங்களும் விதவிதமான அணிவகுப்பில் ஈடுபட உள்ளன.
பொதுமக்கள் இந்த நிகழ்வை இலவசமாக கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை காண பிரதமர் மோடி சென்னை வர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.