மோடி முக்கியத்துவம் கொடுக்கும் பொது சிவில் சட்டம் - எதிர்க்கும் காட்சிகள்!
பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தை அவசியம் என்று கூறும் நிலையில் அனைத்து கட்சிகளும் அதனை எதிர்த்து வருகின்றனர்.
பிரச்சாரம்
இந்த ஆண்டு இறுதியில் சட்ட சபை தேர்தல் மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இவர் நாடு முழுவதும் வாக்கு சாவடிகளில் சிறப்பாக செயல்பட்ட பாஜக நிர்வாகிகளிடம் அவர் உரையாற்றினார். மேலும் அந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, 'நாட்டின் சீரான வளர்ச்சிக்கு பொதுசிவில் சட்டம் அவசியம் என்று கருத்து தெரிவித்தார். வாக்கு வங்கி அரசியலுக்காக பொது சிவில் சட்டத்தை சிலர் எதிர்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த சட்டத்தை கோவா, குஜராத், உள்ளிட்ட மாநிலங்கள் நடைமுறைப்படுத்த முன் வந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் சில கட்சிகள் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுசிவில் சட்டம் குறித்த பிரதமரின் கருத்துக்கள் அரசியலமைப்பின் உணர்வோடு பொருந்தவில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பொது சிவில் சட்டம்
இந்நிலையில், பிரதமர் மோடி வலியுறுத்தும் பொது சிவில் சட்டம் என்பது நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா் ஆகியோா் சிறுபான்மையினராகவும் உள்ளனா்.
திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் இந்துக்கள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உள்ளது. அவ்வாறு சட்டங்கள் தனித்தனியாக இருப்பது நிா்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதாக மத்திய அரசு கூறி வருகிறது.
அதனால் மக்களிடையே ஒற்றுமை உணா்வை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான சட்டங்களை வகுக்க அரசுகள் முயற்சிக்க வேண்டும் என்பதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு வலியுறுத்துகிறது.
அதன் அடிப்படையில், நாட்டில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் இந்த சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் என்று கூறி எதிர்த்து வருகின்றனர்.