தேர்தல் விதிமுறை மீறல் - மோடி ராகுலுக்கு கெடு வைத்த தேர்தல் ஆணையம்!!
தேர்தல் விதிமுறையை மீறி நடந்து கொண்டதாக தேர்தல் ஆணையம் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல்
நாட்டின் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதற் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சார களத்தில் தீவிரமாக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் தொடர்ந்து ஒருவர் மீது மற்றொருவர் கடும் வார்த்தைகளில் விமர்சித்து வருகிறார்கள்.
ராஜஸ்தானில் பிரதமர் பேசும் போது, முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதாக காங்கிரஸ் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றது. அதே போல, நாட்டு பெண்களின் தாலியை காங்கிரஸ் பறித்துவிடும் என்று மோடியும் பெரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இருதரப்பினர் பேச்சையும் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் தேர்தல் ஆணையம் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக கூறி அந்த விவகாரத்தில் விளக்கமளிக்கமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தலைவர்களின் பேச்சு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு, வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.