ஜோ பைடனை சந்தித்த மோடி - திருடிய 297 பொருட்களை திருப்பி தந்த அமெரிக்கா

Joe Biden Narendra Modi United States of America India
By Karthikraja Sep 22, 2024 04:00 PM GMT
Report

இந்தியாவுக்கு சொந்தமான 297 பொருட்களை அமெரிக்கா திருப்பியளித்துள்ளது.

மோடி பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக சென்றுள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் அமரிக்க அதிபர் ஜோ பைடனின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடியை கட்டி தழுவி வரவேற்றார்.  

modi meets joe biden

இந்த சந்திப்பின்போது இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்துவது, இருநாடுகளின் உலகளாவிய கூட்டு யுக்தியை விரிவுபடுத்துவது, பிராந்தியம் மற்றும் உலக அளவில் நடைபெறும் பிரச்னைகள் மற்றும் அதனை தடுப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து ஆலோசித்தனர்

க்வாட் மாநாடு

தொடர்ந்து, க்வாட் மாநாட்டில் பங்கேற்ற பேசிய பிரதமர் மோடி, “இந்தோ – பசுபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் க்வாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டியது முக்கியம். க்வாட் மாநாட்டை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த விரும்புகிறோம். சர்வதேச விதிகளை மதித்து அனைத்து பிரச்னைகளிலும் அமைதியான தீர்வுகளுக்கு ஆதரவு தருகிறோம்” என குறிப்பிட்டார்.  

modi speech in quad

இந்நிலையில் பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட, 297 பழங்காலப் பொருட்களை அமெரிக்கா அரசு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.  

இந்தியா பெரிய துஷ்பிரயோகம் செய்கிறது - மோடியை சந்திக்கவுள்ள டிரம்ப்

இந்தியா பெரிய துஷ்பிரயோகம் செய்கிறது - மோடியை சந்திக்கவுள்ள டிரம்ப்

பொருட்களை திருப்பியளித்த அமெரிக்கா

1 ஆம் நூற்றாண்டு தென்னிந்தியாவைச் சேர்ந்த கல் சிற்பம், 13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்னிந்தியாவில் இருந்து கிரானைட்டால் செய்யப்பட்ட கார்த்திகேய பகவான், 17-18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்னிந்தியாவின் வெண்கலத்தில் விநாயகர், கிழக்கு இந்தியாவின் வெண்கலத்தில் விஷ்ணு பகவான், தென்னிந்தியாவின் வெண்கல கிருஷ்ணர் போன்ற பொருட்களை திருப்பி அளித்துள்ளது. 

ஜூன் 2016 இல் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது 10 பழங்காலப் பொருட்களும், 2021 செப்டம்பர் பயணத்தின் போது 157 தொல்பொருட்களும், 2023 ஜூன் மாத பயணத்தின் போது 105 தொல்பொருட்களும் திருப்பிக் கொடுக்கப்பட்டன.