பெரியாருக்குப் பதிலாக மோடியை தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டார்களா? - அதிமுக மீது ப.சிதம்பரம் ஆவேசம்

bjp congress aiadmk chidambaram periyar
By Jon Apr 05, 2021 11:43 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதில், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை போட்டியிடுகின்றன. இந்த முறை பாஜக சட்டமன்ற தேர்தலில் எப்படியேனும் வெற்றிபெற வேண்டும் என டெல்லியிலிருந்து பாஜக தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

தேர்தல் பரப்புரையில் பேசிய பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகத்துக்கு பாஜக வந்துள்ளது என்று கூறியுள்ளார். இவரது கருத்துக்கு பல கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்வீட்டர் பதிவில் தமிழ்நாட்டில் பெரியாரிசத்தை ஒழிக்கவே பாஜக இங்கு வந்துள்ளது என பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும், சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார். தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார் .

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா .

தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக அதிமுக ஏற்றுக் கொண்டுவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15