அப்பட்டமான பொய்யை சொல்லும் பிரதமர் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்

M K Stalin Tamil nadu DMK Narendra Modi
By Karthick Mar 07, 2024 01:57 AM GMT
Report

 தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் மோடி அப்பட்டமான பொய்களை கூறியுள்ளார என் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அப்பட்டமான பொய்...

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.

ஒரு சல்லிக்காசு கூட மத்திய அரசு தரவில்லை; மக்கள் ஏமாற மாட்டார்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஒரு சல்லிக்காசு கூட மத்திய அரசு தரவில்லை; மக்கள் ஏமாற மாட்டார்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!


தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?

ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என நினைத்து நாங்கள் நலத்திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் #NeengalNalama திட்டம்.