முத்துராமலிங்கத் தேவர் வடிவில் இருக்கிறார் பிரதமர் - அண்ணாமலை ஆருடம்
ஆன்மீகமும், தேசமும் இரண்டு கண்கள் என சொன்ன முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் மோடி இருக்கின்றார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பேச்சு
மதுரையில் நடைபெற்ற அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய அவர், நீதி கட்சி, காங்கிரஸ் - திமுக போன்ற கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர் முத்துராமலிங்க தேவர் என பெருமிதம் தெரிவித்து, குடும்ப - அராஜக ஆட்சி நடைபெற்று வரும் இந்த காலகட்டத்தில் முத்துராமலிங்க தேவர் தேவைப்படுகிறார் என்று கூறினார்.
ஆன்மீகமும், தேசமும்
தற்போது முத்துராமலிங்க தேவரின் வடிவில் நமக்கு பாரத பிரதமர் மோடி கிடைத்துள்ளார் என்று சுட்டிக்காட்டிய அண்ணாமலை, ஆன்மீகமும், தேசமும் இரு கண்கள் என்ற தேவர் சொன்ன பாதையில் தான் பிரதமர் மோடி பணியாற்றுவதாக கூறினார்.
முத்துராமலிங்க தேவர் காட்டிய நேர்மையான அரசியலை தான் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி நடத்தி கட்டியதாக தெரிவித்த அண்ணாமலை, இருவரின் வாழ்க்கை வரலாற்றை படித்தால் இருவருமே ஒரே பாதையில் தான் பயணிக்கிறார்கள் என்பது தெரிந்து விடும் எனக்கூறினார்.