யார் என்று தெரிகிறதா? எமர்ஜென்சியின் போது மாறுவேடத்தில் தலைமறைவாக இருந்த இளம் மோடி!!
இந்தியாவில் தற்போது மீண்டும் எமர்ஜென்சி குறித்த கருத்துக்கள் வலுத்துவருகின்றன.
எமர்ஜென்சி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 1971-ஆம் ஆண்டு ரைபரேலி வெற்றியை அலகாபாத் நீதிமன்றம் செல்லாது என தீர்பளித்ததன் வெளிப்பாடு இன்றளவும் இந்திய அரசியலில் எதிரொலித்து வருகின்றது.
அவரை பிரதமராக இருக்க கூடாது என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், அப்போது நாடாளுமன்ற வாக்கெடுப்புகளில் இந்திரா காந்தி கலந்து கொள்ள கூடாது என தெரிவித்து ஆனால், இந்திரா காந்தி பிரதமராக தொடரலாம் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நாட்டின் அதிகாரமிக்க இடத்தில் இருந்த இந்திரா காந்தி, எமர்ஜென்சியை நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்தார். 1975 ஆம் ஆண்டு துவங்கிய இந்த எமர்ஜென்சி 21 மாதங்கள் நீடித்தது. 1977 ஆம் ஆண்டு மார்ச் வரை எமர்ஜென்சி நீடித்தது.
மோடி
அப்போது நாட்டில் பல அதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் எமர்ஜென்சிக்கு எதிராக பேசிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மிசா என்ற கைது நடவடிக்கை அப்போது தான் கொண்டுவரப்பட்டது. இந்த மிசா கைதே நாட்டில் பல தலைவர்களை அடையாள காட்டியது.
தற்போதைய இந்தியாவின் முக்கிய தலைவர்களான மு.க.ஸ்டாலின், லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் போன்றோர் அப்போது தான் அரசியலில் அடையாளம் காட்டப்பட்டனர்.
இந்த நிலையில், தான் தொடர்ந்து தற்போது நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். மீண்டும் எமர்ஜென்சி குறித்த பேச்சுக்கள் இந்தியளவில் வலுப்பெற்றுள்ளது. தற்போதைய பிரதமர் மோடி அப்போது என்ன செய்து கொண்டிருந்தார் என்ற தேடுதலும் அதிகரித்துள்ளது.
அவர் மாறுவேடத்தில் தலைமறைவாக இருந்துள்ளார் என்ற தகவலும் ஒரு புகைப்படமும் வெளிவந்துள்ளது. அப்போது ஆர்எஸ்எஸ் காரியகர்த்தாவாக இருந்தவர் சிங் வேடத்தில் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அவர் மாறுபட்ட வேடங்களிலும் அவர் தலைமறைவாக இருந்துள்ளார்.