3 மாநில தேர்தல் வெற்றி..!! மோடி கொடுத்த கேரன்ட்டி வாக்குகளாக மாறியுளளது - அண்ணாமலை
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு அதிகமாக கைப்பற்றும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3 மாநில தேர்தல் வெற்றி
பாஜக ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,சத்தீஸ்கர் என 3 மாநிலங்களில் நேற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றிகளை குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,4 மாநிலத் தேர்தல் முடிவுகளில் பாஜக வரலாறு படைத்திருக்கிறது என்று கூறி, இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம்தான் எனக்கூறினார்.
ஒ.பி.சி சமூகத்துக்கு முன்னுரிமை இல்லை, இலவச திட்டங்கள் என்பது போன்ற பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்த நிலையிலும் அதனை தாண்டி, மோடி கேரன்ட்டி கொடுத்தார் என்றும் மோடி கேரன்ட்டி வாக்குறுதி அளித்ததன் மூலம் வெற்றிபெற்றுள்ளோம் என தெரிவித்தார்.
2024-ல் 400 எம்.பி-க்களைத் தாண்டி வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை தெரிவித்த அண்ணாமலை, ஆட்சி போனாலும் பரவாயில்லை, சனாதன தர்மத்தை ஒழிப்பதுதான் முக்கியம் என உதயநிதி கூறியதை சுட்டிக்காட்டி மோடி கேரண்ட்டியும், சனாதன பிரசாரமும் வடமாநிலத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளன என்றார்.
சபாநாயகர் அப்பாவு இடைத்தரகர்போல் செயல்படுகிறார் என்று விமர்சித்து, அவர் எப்படி சபையை நடத்துகிறார் என்று நமக்கு தெரியும் என்றும் பாஜக எம்.எல்.ஏ-க்கள் பேச முயன்றால், மைக்கை ஆஃப் செய்கிறார் என்று குற்றம்சாட்டி, இடைத்தரகர் என்ற வார்த்தையைச் சொல்ல தமிழ்நாட்டில் ஒருவருக்கு தகுதி இல்லை என்றால் அது சபாநாயகர் அப்பாவுதான்" என விமர்சனம் செய்தார்.