மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் வரவில்லை - ராகுல் காந்தி..!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மீண்டும் தொடங்கியுள்ளார்.
பாரத் ஜோடோ நியாய யாத்திரை
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மணிப்பூர் மாநில தௌபல் மாவட்டத்தின் கோங்ஜோம் என்ற நகரில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையை அக்கட்சியின் தேசிய கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே துவங்கி வைத்தார்.
துவக்க விழாவில் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், மணிப்பூர் மக்களின் கண்ணீரைத் துடைக்க இந்தியப் பிரதமர் இதுவரை வராதது வெட்கக்கேடானது என கடுமையாக விமர்சித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மற்றும் RSS'க்கு மணிப்பூர் மாநிலம் நாட்டின் ஒரு பகுதி அல்ல என்றும் அவர் சாடினார்.
அமைதியை...
மணிப்பூர் மக்கள் சொல்வதைக் கேட்கவும், உங்களின் வலியைப் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள்(காங்கிரஸ்) இங்கு வந்துள்ளோம் என்ற ராகுல், சமத்துவம், நல்லிணக்கம் கொண்ட இந்தியாவின் புதிய பார்வையை தங்கள் கூட்டணி முன்வைக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.
வரவிருக்கும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு தான் கால் நடையாக அல்லாமல், நடைபயணத்தை நடைபயணமாகவும், வாகனத்திலும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த ராகுல், மணிப்பூர் மாநிலத்தில் நிலவிய நல்லிணக்கத்தையும் அமைதியையும் மீண்டும் கொண்டுவருவோம்.” என உறுதிபட தெரிவித்தார்.