என் நண்பர் மீது துப்பாக்கி சூடு - வன்முறைக்கு இடமேயில்லை!! பிரதமர் மோடி கொந்தளிப்பு

Donald Trump Narendra Modi United States of America India
By Karthick Jul 14, 2024 03:21 AM GMT
Report

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது உலகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளது.

துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியாசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

Donald Trump shot

அமெரிக்கா அதிபர் தேர்தல் என்பது உலக முழுவதுமே பலரின் கவனத்தை பெறுகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பே முந்துகிறார். அவரே தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. பெனிசில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பேரணியில் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.

தேர்தல் பேரணியில் சுடப்பட்டார் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்!! அதிர்ந்த அமெரிக்கா

தேர்தல் பேரணியில் சுடப்பட்டார் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்!! அதிர்ந்த அமெரிக்கா

காதருகே தோட்ட டிரம்பை உரசி சென்றுள்ளது. நல்வாய்ப்பாக அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை. உலக நாடுகள் அதிர்ந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி இது குறித்து கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மோடி கண்டனம்

அவரின் பதிவில்,

எனது நண்பரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை. சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை.

PM Modi condemsn Donald Trump shot

அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.