கஜினி போல எத்தனை முறை படையெடுத்தாலும் ஓட்டு விழாது - செல்லூர் ராஜு
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக மக்கள் எப்போதும் மத அரசியலுக்கு எதிராக தான் இருப்பார்கள் என தெரிவித்தார்.
தமிழக வருகை
பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்ந்து வருகின்றது,. வரும் 22-ஆம் தேதி அவர் மீண்டும் தமிழகம் வரவுள்ளதாகவும், டெல்டா பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு,
கஜினி போல
தமிழ்நாடு வரும் மோடி தலைவர் - அம்மா புகழ் பாடுகிறார். அவர்களின் தலைவர்களை குறித்து பேசுவதில்லை. அவர்களின் ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை. அதிமுகவின் ஓட்டை ஏமாற்றி வாங்கிவிட பார்க்கிறார் மோடி..?
தமிழ்நாட்டு காரர்கள் கெட்டி காரர்கள். பிரதமர் மோடி கஜினி மாதிரி அவர் எத்தனை முறை படையெடுத்தாலும், தமிழ்நாடு மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள். எங்கள் தலைவர் சொன்னது போல, அரசியலில் மதம் இருக்கக்கூடாது.
தமிழ்நாடு மக்கள் எப்போதும் மத வெறியருக்கு எதிராக தான் இருப்பார்கள். ஏனென்றால் மக்களுக்கு தெரியும் பாஜக ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் என்று. இவ்வாறு அவர் கூறினார்.