உறுதியான கூட்டணி - ஆனால் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் கேட்கும் தேமுதிக? அதிமுக முடிவு என்ன..?
முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றிபெற்றிருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக - அதிமுக
தேமுதிக கட்சியை தங்கள் கூட்டணியில் இணைத்து கொள்ள அதிமுக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும் தற்போது வரை கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமுகமான நிலையை அடியவில்லை. தேமுதிக 7 மக்களவை தொகுதிகளை கேட்டதாகவும், ஆனால் அதிமுக 4 தொகுதிகளை மட்டுமே வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்தன.
இந்த நிலையில், தற்போதைய செய்தி ஒன்று பேசப்பட்டு வருகிறது. அதாவது முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது பதவியை இழந்துள்ள நிலையில், அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர்
வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் அத்தொகுதி மற்றும் விஜயதரணி ராஜினாமா செய்த விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரலாமே என்ற சூழல் நிலவுகிறது.
அதனை பொருட்டு தற்போது கூட்டணியில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியையும் தேமுதிக கேட்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன் காரணமாக தான் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகவும் விரைவில் இதில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு அளித்த பேட்டியில், தேமுதிக அவை தலைவர் இளங்கோவன் பேசும் போது, அதிமுகவுடன் கூட்டணி உறுதி என்ற நிலைப்பாட்டை எட்டியுள்ளோம் என்றும் இது வெற்றிகரமான கூட்டணி என்றார்.