சாதியின் பெயரால் இந்தியாவை பிரிக்க முயல்கிறார்கள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நகர்ப்புற நக்சல்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மோடி
சர்தார் வல்லபாய் படேலின் 149வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின் பேசிய அவர், "இன்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டடும் அதே நாளில் தீபாவளி கொண்டாடி வருகிறோம் என பேசினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
மேலும், "சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இன்று முழு நாடும் மகிழ்ச்சியடைந்துள்ளது. இதுவே சர்தார் வல்லபாய் படேலுக்கு நான் செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலி.
ஒரே நாடு ஒரே தேர்தல் முன்மொழிவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஆண்டின் இறுதியில் பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும். விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்.
காடுகளில் நக்சலிசம் முடிவுக்கு வரும் நிலையில், நகர்ப்புறங்களில் நக்சலிசத்தின் புதிய மாதிரி உருவாகி வருகிறது. நாம் நகர்புற நக்சல்களை அடையாளம் கண்டு அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டம்
இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் சில சக்திகள் நாட்டை சீர்குலைத்து, அராஜகத்தை உருவாக்கி, உலகில் இந்தியா பற்றி எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். சாதியின் பெயரால் அவர்கள் நாட்டைப் பிரிக்க முயல்கிறார்கள். அவர்கள் வளர்ந்த இந்தியாவுக்கு எதிரானவர்கள்.
70 ஆண்டுகளாக நாடு முழுவதும் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றும், அந்த சட்ட புத்தகத்தை இன்றைக்கு கையில் தூக்கி முழங்குபவர்களே அதை அதிகமாக அவமதித்ததுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முதன்முறையாக அரசியலமைப்பு சட்டத்தின் பெயரில் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் அந்த சட்டத்தை வகுத்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும். இதுவே நாம் அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி" என பேசினார்.