உங்களுக்கு உதவ முடியவில்லை மன்னித்துக்கொள்ளுங்கள் - பிரதமர் மோடி வேதனை

Narendra Modi Delhi India West Bengal
By Karthikraja Oct 29, 2024 09:02 PM GMT
Report

டெல்லி மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள மூத்த குடிமக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரதமர் மோடி

தன்வந்திரி ஜெயந்தி மற்றும் நாட்டின் 9வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு டெல்லியில், உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் ரூ.12,850 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

modi ayushman bharat

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "மக்களவைத் தேர்தலின் போது, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரையும் ‘ஆயுஷ்மான் யோஜனா’ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வருவேன் என உறுதி அளித்திருந்தேன். 

பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு - கோவிலில் பரபரப்பு

பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு - கோவிலில் பரபரப்பு

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

இன்று தன்வந்திரி ஜெயந்தி நாளில் இந்த உத்தரவாதம் நிறைவேற்றப்படுகிறது. அதன்படி, நாட்டிலுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஆயுஷ்மான் வயா வந்தனா காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும்.

modi ayushman bharat

டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் இணையவில்லை. அரசியல் காரணங்களுக்காக அம்மாநில ஆளும் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

அரசியல் நலன்களுக்காக உங்கள் சொந்த மாநிலத்தின் மக்களை ஒடுக்கும் போக்கு எந்தவொரு மனிதாபிமான அணுகுமுறைக்கும் எதிரானது, என்னால் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். ஆனால், டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள முதியவர்களுக்கு சேவை செய்வதிலிருந்து அரசியல் சுவர்கள் என்னைத் தடுக்கின்றன" என பேசினார்.