பிரதமர் உழைப்பின் ரகசியம் என்ன?ஆரம்பகால வாழ்கையை ஓப்பனாக பேசிய பில் கேட்ஸ்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 25ஆவது ஆண்டு முன்னிட்டு பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதமர் உழைப்பின் ரகசியம்
இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 25ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இணை நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டு செய்யப்பட்டது. அதில் இருவரும் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னை தொடர்ந்து நடத்துவது என்ன, ஓய்வு பழக்கம் உள்ளிட்ட சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்தார். உலகின் மிகவும் கடினமாக உழைக்கும் தலைவர்களில் ஒருவர் பிரதமர் மோடி என்று குறிப்பிட்ட பில்கேட்ஸ், அவர் எவ்வாறு ஓய்வெடுக்கிறார் என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, தனது ஓய்வு என்பது autopilot முறையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.உதாரணதிற்கு, இரவு அதிகநேரம் வேலை செய்த பின்னும் தன்னால் அதிகாலையில் எழுந்திருக்க முடியும், இதற்காக தான் கூடுதல் முயற்சி செய்ய வேண்டியதில்லை, அது தனக்கு இயல்பாகிவிட்டதாக குறிப்பிட்டார்.
இமயமலையில் அதிகாலை 3:20 மணி முதல் 3:40 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் நீராடும் பாரம்பரியத்தை தான் பின்பற்றியதால், இந்த பழக்கம் காலப்போக்கில் தன் உடலை சீரமைத்துவிட்டதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
பில் கேட்ஸ் ஆரம்பகால வாழ்கை
இதனை தொடர்ந்து,பேசிய பில் கேட்ஸ் தனது ஆரம்பகால வாழ்கை , பிடித்த புத்தகம் குறித்து பகிர்ந்து கொண்டார்.அப்போது, உலகில் சிப் அதிசயம் நிகழும் நேரத்தில் தான் பிறந்தது மிகவும் அதிர்ஷ்டமானது என்றார்.
தனக்கு நல்ல கல்வி கிடைத்ததாகவும், வாழ்க்கையில் தனக்கு நம்பிக்கையான பார்வை இருந்ததால், பள்ளியை பாதியில் நிறுத்தியது ரிஸ்க்காக தெரியவில்லை என்றும் பில்கேட்ஸ் பிரதமர் மோடியுடன் கூறியுள்ளார்.
பின்னர், பிரதமர் மோடி அவரிடம் புத்தகங்களைப் பற்றி கேட்ட போது, ஸ்டீவன் பிங்கரின் தி பெட்டர் ஏஞ்சல்ஸ் ஆஃப் அவர் நேச்சர் புத்தகத்தை விரும்புவதற்கான காரணத்தை பில்கெட்ஸ் விளக்கினார்.
உலகத்தைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டால், குழந்தைகள் இன்னும் இறந்து கொண்டிருப்பதையும், நாம் நம்பமுடியாத முன்னேற்றத்தை அடைந்திருப்பதையும் உணரலாம் என்ற இரட்டைத்தன்மை இந்த புத்தகம் ஒரு அற்புதமான வழியில் படம்பிடிக்கிறது என்று தான் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.