மோடி பார்க்கதான் அப்பா மாதிரி; ஆனால், ரொம்ப கடினமான நபர் - டிரம்ப் பேச்சு
மோடி மிக கடினமான நபர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மோடி கடினமானவர்
தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதாரம் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவும் - பாகிஸ்தானும் சண்டையிட்டபோது இருநாட்டு தலைவர்களுடனும் தான் பேசினேன். வர்த்தகம் செய்யப்போவது இல்லை என கூறினேன். பிரதமர் மோடி பார்க்க மென்மையானவர்.
டிரம்ப் பேச்சு
ஆனால் அதே சமயம் மிக கடினமான நபர். தான் பேசிய பின்னரும் தாங்கள் சண்டையிடுவோம் என்று கூறினர். இரண்டு நாட்களுக்கு பின் இருவரும் தொலைபேசியில் அழைத்து தங்களுக்கு புரிகிறது என்று கூறி சண்டையை நிறுத்தினார்கள்.

இதனை ஜோ பைடன் செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?, நிச்சயம் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தாமல் இருந்திருந்தால் 250% வரி விதிப்பை எதிர்கொண்டு இருக்க நேரிடும்.
பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதையையும், அன்பும் கொண்டுள்ளேன். சிறந்த உறவை கொண்டுள்ளேன். தனது நல்ல நண்பர். விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.