மாற்றுத்திறனாளிகளை கேலி செய்து ரீல் - யுவராஜ், ரெய்னா, ஹர்பஜன் மீது பாய்ந்த வழக்கு!

Swetha
in கிரிக்கெட்Report this article
மாஜி கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேலி செய்து ரீல்..
டி20 தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்பட "தோபா, தோபா" என்ற பாடலுக்கு வேடிக்கையாக நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தனர்.
அதில், தாங்கள் மிகவும் சோர்வுற்று இருப்பதாகவும், உடலில் பல இடங்களில் வலி இருப்பதாகவும் சுட்டிக்காட்டுவதற்காக கால்களை இழுத்து, இழுத்து அவர்கள் நடனமாடியது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
பாய்ந்த வழக்கு
இதனால் மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் அவர்கள் நடனம் ஆடி இருப்பதாக மாற்று திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்திய பாராலிம்பிக் சங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளன.
எனவே அந்த வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அதில் இடம் பெற்ற முன்னாள் வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பை நடத்தி வரும் அர்மான் அலி என்பவர் டில்லி லஜபத் நகரில் உள்ள அமர்காலணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் மூன்று பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.