மொபைல் போனால் வரும் புற்றுநோய்? WHO ஆய்வின் ஷாக் தகவல்!
மொபைல் போன் பயன்பாடு குறித்த WHOவின் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மொபைல் போன்
ஆஸ்திரேலியாவின் அணு மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையில் ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் மொபைல் போன் பயன்பாட்டிற்கும், பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
பின் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) நியமிக்கப்பட்டு, ஆஸ்திரேலிய கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் அணுசக்தி பாதுகாப்பு நிறுவனம் (ARPANSA) இரண்டாவது முறையாக மேற்கொண்ட மதிப்பாய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதிலும், மொபைல் போன் பயன்பாட்டிற்கும், மூளை மற்றும் பிற தலை புற்றுநோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
WHO தகவல்
மொபைல் போன்களிலிருந்து வெளியாகும் ரேடியோ அலை வெளிப்பாடுக்கும் லுகேமியா, லிம்போமா, தைராய்டு மற்றும் வாய்வழி புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களுக்கும் இடையே சம்பந்தம் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. உலகளவிலான இறப்புக்கு புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணமாகும்.
இது 2018 ஆம் ஆண்டில் 9.6 மில்லியன் இறப்புகள் அல்லது 6 இறப்புகளில் 1 இறப்புக்குக் காரணமாக இருந்தது. உலக சுதாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, புற்றுநோய் என்பது உடலின் எந்த உறுப்பு அல்லது திசுக்களிலும் பரவக்கூடிய நோய்களின் ஒரு பெரிய குழு.
அவை அசாதாரணமான செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரும்போது, அவற்றின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி உடலின் மற்ற பகுதிகளை ஆக்கிரமிக்கும்போது அல்லது பிற உறுப்புகளுக்கு பரவும்போது ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.