இனி ஆண்டாள் கோவிலில் இதற்கு தடை - முக்கிய அறிவிப்பு!
ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டாள் கோவில்
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபலமான ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
செல்போன் தடை
இதற்காக கோவில் முன்பு செல்போன்கள் பாதுகாக்கும் அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.