விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறதா? அப்போ இதை செய்யாதீங்க - ஆய்வில் அதிர்ச்சி!
அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்துவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது.
விந்தணு
குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் , வேலை நேரம் தான்.
அதிலும் குறிப்பாக மன அழுத்ததில் இருக்கும் ஆண்கள் மது, புகையிலை பிடிப்பது உள்ளிட்ட பழக்கங்களால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும்.குறிப்பாக தொடர்ச்சியான தூக்கன் இன்மையாலும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்துவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல்
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உடற்பயிற்ச்சி , சரிவிகித உணவு உதவும். மேலும் திராட்சை ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும்.
திராட்சை பழம் அல்லது உலர் திராட்சையை சாப்பிடலாம். ஆண்கள் தினமும் 5 முதல் 10 பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.