அதிரும் களம் - அதிமுக எம்.பி - ம.நீ.ம மாநில செயலாளரை பாஜகவில் இணைத்த அண்ணாமலை..!!
தொடர்ந்து வேற்று கட்சியினர் தமிழக பாஜகவில் இணைவது தொடர்கதையாகியுள்ளது.
பாஜகவில்..
அதன் படி இன்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில பரப்புரை செயலாளராக இருந்த பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை இயக்குனருமான, டாக்டருமான அனுஷா ரவி இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார்.
மக்கள் நீதி மையம் கட்சியின், மாநிலச் செயலாளரும் (பரப்புரை), கல்வியாளரும், பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை இயக்குனருமான, டாக்டர் @DrAnusharavi அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமைப் பண்புகளாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு… pic.twitter.com/trGQo0E0P6
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 16, 2024
அதே போல, அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகுமாரும் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார். மாநில செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜகவில் இணைந்துள்ளது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்.பி
அதிமுகவின் முன்னாள் எம்.பி'யான விஜயகுமார் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் என்றார் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழகத்தில் வலுவாக காலூன்ற பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பாஜகவிற்கு இவ்வாறு மாற்று கட்சியினர் அவர்கள் கட்சியில் இணைவது வரும் தேர்தலில் பலனளிக்குமா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.