UFC ரிங்கில் முதல் இந்திய பெண் - முதல் போட்டியிலேயே வெற்றி!! யார் இந்த பூஜா தோமர் ??
MMA எனப்படும் Mixed Martial Arts வீராங்கனையான பூஜா "தி சைக்ளோன்" தோமர்(Pooja "theCyclone" Tomar), UFCயில் இந்தியாவின் முதல் பெண் வீராங்கனையாக UFC அறிமுகமாகி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
MMA
உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டாக உள்ளது Mixed Martial Arts. சண்டையை மையமாக கொண்ட இதில் தான், உலகின் புகழ் பெற்ற வீரர்கள் வரிசைக்கட்டி நிற்கிறார்கள்.
இதில், தான் முதல் இந்திய பெண்ணாக நுழைந்துள்ளார் பூஜா தோமர்.உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தோமர், தனது முதல் போட்டியிலேயே ரேயான் டோஸ் சாண்டோஸை(Rayanne dos Santos) ஸ்ட்ராவெயிட்(Strawweight) என்ற பிரிவில் எதிர்கொண்டார்.
15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டி மூன்று சுற்றுகள் நீடித்தது. ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோமர் இறுதியில், 30-27, 27-30, 29-28 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றார்.
முதல் இந்திய பெண்
போட்டிக்கு பிறகு பேசிய தோமர், "இந்தியப் வீரர்கள் தோல்வி அடைபவர்கள் அல்ல என்பதை உலகுக்குக் காட்ட விரும்புகிறேன். நாங்கள் எல்லா வழிகளிலும் முன்னேறுவோம்...நாங்கள் நிறுத்தப் போவதில்லை.. விரைவில் UFC சாம்பியனாவோம் என உறுதியுடன் கூறினார்.
மேலும், இது எனது வெற்றி அல்ல என்றவர், இது அனைத்து இந்திய ரசிகர்களுக்கானது என்றும் தான் மிகவும் பெருமையாக உணர்ந்ததாக கூறினார்.
UFC MMA சண்டையில் முதல் பெண்ணாக களமிறங்கியது மட்டுமின்றி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ள பூஜா தோமர், உலகளவில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.