உடல்நலக்குறைவு: முதலமைச்சர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து!

M K Stalin Tamil nadu Madurai
By Sumathi Oct 29, 2022 04:27 AM GMT
Report

உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகுவலி காரணமாக மருத்துவ பரிசோதனைசெய்துகொண்டார். முதுகுவலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடல்நலக்குறைவு: முதலமைச்சர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து! | Mkstalins Pasumpon Trip Canceled

இந்நிலையில், நாளை பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளமாட்டார் என அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் அவர்களுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால்,

தேவர் குருபூஜை

நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, வரும் 30-10-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், முதலமைச்சர் சார்பில்,

மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உள்ளிட்டோர் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.