எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

M K Stalin Rahul Gandhi
By Karthikraja Jun 26, 2024 04:30 AM GMT
Report

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்று இருந்தார். பின்னர் வயநாடு தொகுதி எம்.பி.பதவியை ராஜினாமா செய்து விட்டு ரேபரேலி எம்.பி.யாக ராகுல் தொடர்கிறார். 

rahul gandhi

இந்த நிலையில், 18வது மக்களவையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல்காந்தி பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான முடிவு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

ஸ்வீட் பாக்ஸ் எங்கே - முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துக்கு ராகுல் காந்தி பதில்

ஸ்வீட் பாக்ஸ் எங்கே - முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துக்கு ராகுல் காந்தி பதில்

மு.க.ஸ்டாலின்

இதனையொட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ராகுல் காந்தி உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “அன்பு சகோதரர் ராகுல்காந்தியை அவரது புதிய பதவிக்காக இந்தியா வரவேற்கிறது. அவரது குரல் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.