காவிரி விவகாரம்...தனி தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர்!!!

M K Stalin Tamil nadu DMK Tamil Nadu Legislative Assembly
By Karthick Oct 09, 2023 08:01 AM GMT
Report

இன்று கூடி நடைபெற்று வரும் தமிழக சட்டசபையில் காவிரி விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை முதல்வர் முக ஸ்டாலின் முன்மொழிந்தார்.

காவிரி விவகாரம்

காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர கர்நாடக அரசு மறுப்பதால், டெல்டா மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மாதங்களாக பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு பல முன்னெடுப்புகளை நீரை பெற்று தருவதில் எடுத்து வருகின்றது.

தெர்மாகோல் போட்டு அணையை மூடிட்டோம்...சட்டசபையில் துரைமுருகனின் Thuglife !!

தெர்மாகோல் போட்டு அணையை மூடிட்டோம்...சட்டசபையில் துரைமுருகனின் Thuglife !!

தனி தீர்மானம்

இந்நிலையில், இன்று கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தனி தீர்மானத்தை காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர்,  சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானத்தை முன் மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கு இதுவரை 9.19 டிஎம்சி தண்ணீர் வர வேண்டிய நிலையில் இதுவரை 2.18 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.

தமிழகத்துக்கு கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், காவிரி ஆற்றில் செயற்கையான நெருக்கடியை கர்நாடகம் உருவாக்கி வருகிறது என்றும் காவிரியில் தண்ணீர் திறக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டார்.

mkstalin-proposes-special-treaty-in-kaveri-issue

செயற்கையான நெருக்கடி ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்துக்காக போராடி வருகிறோம் என்று கூறி, சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட ஜூலை 17ஆம் தேதி முதல் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றும் செயற்கையான நெருக்கடிய கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது என சாடினார்.

தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என கூறிய முதல்வர் முக ஸ்டாலின், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாத வாரியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினோம் என குறிப்பிட்டார்.