தெர்மாகோல் போட்டு அணையை மூடிட்டோம்...சட்டசபையில் துரைமுருகனின் Thuglife !!
தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூடத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று கூடி நடைபெற்று வருகின்றது.
தமிழக சட்டசபை
இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழ்நாடு சட்டசபை கூடியது. இந்தச் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சபை கூடி நடைபெற்ற போது பேசிய அதிமுகவின் செல்லூர் ராஜு, கடந்த ஆட்சியில் 1296 கோடி ரூபாய் செலவில் முல்லை பெரியாறு அணையில் இருந்து மக்களுக்கு பயன் பெரும் நிலையில் தண்ணீர் அளிக்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது என்று குறிப்பிட்டார். இந்த பணிகள் தற்போது நடைபெற்று வந்தாலும், அது மெதுவாக நடைபெற்று வருகின்றது என்று கூறி அதனை விரைவாக முடித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு இன்னும் அந்த பணிகளில் 15 கிலோமீட்டர் தான் மீதமுள்ளது என் குறிப்பிட்டு, செல்லூர் ராஜு கேட்டுக்கொண்டது போல சுத்தமான தண்ணீரை நிச்சயமாக வழங்குவோம் என கூறினார்.
அதன் பிறகு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணைகளில் இருந்து சிறப்பான நீர் தரப்படுவதாக குறிப்பிட்டு, அணையில் இருந்து நீர் வீணாகாமல் இருக்க தெர்மாக்கோல் போட்டு தண்ணீரை பாதுகாத்துளோம் என தெரிவித்தார்.