"உரிமைகளை மதிக்கவும்" பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

M K Stalin Narendra Modi
By Karthikraja Jun 10, 2024 04:33 AM GMT
Report

 மூன்றாவது முறையாக நமது நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு வாழ்த்து தெரிவித்தார்.

மோடி பதவியேற்பு 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 

narendra modi

இதனை தொடர்ந்து மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார். அதனுடன் சேர்த்து 72 பேர் அடங்கிய அமைச்சரவையும் பதவி ஏற்று கொண்டது. இதில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள், 36 பேர் இணை அமைச்சர்கள், 5 பேர் தனி அந்துஸ்து பெற்ற இணை அமைச்சர்கள். இவர்களில் 11 அமைச்சர்கள் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 

'நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஆகிய நான்' - பிரதமராக பதவியேற்றார் மோடி!

'நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஆகிய நான்' - பிரதமராக பதவியேற்றார் மோடி!

ஸ்டாலின் வாழ்த்து

நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமர் ஆகி உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் நேற்று இரவு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது வாழ்த்து செய்தியில், "தொடர்ச்சியாக 3வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமராக நீங்கள் அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், நாட்டின் மதச்சார்பின்மையை பராமரிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மதிக்கவும், நமது ஜனநாயகத்தை பாதுகாக்கவும் உண்மையுடன் பாடுபடுவீர்கள் என நம்புகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.