மீனவர்களை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - மகிழ்ச்சியில் மக்கள்!
தமிழக முதல்வர் மீனவர்களின் வீட்டிற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி
ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் முகாமில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் அங்கு சென்றார்.
தொடர்ந்து, அவர் முன்னதாக பேராவூரில் நடைபெற்ற திமுக தென் மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, பின்னர் பாம்பன் வழியாக அக்காள்மடம் சேதுபதி நகர் பகுதியில் முதலமைச்சரை சந்திக்க மக்கள் காத்திருந்தனர், அப்பொழுது முதல்வர் காரில் இருந்து இறங்கி சென்று மீனவர்களை சந்தித்தார்.
மீனவர்களுடன் சந்திப்பு
இந்நிலையில், முதல்வர் மீனவர்களிடம் மீனவர் நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வந்து சேர்கிறதா? என கேட்டார். பின்னர், மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து இருக்கிறீர்களா? என்று அங்குள்ள பெண்களிடம் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.
பாம்பன் மீனவர் காலனியில் உள்ள மரிய ஹெட்சன் என்ற மீனவர் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர், அவரது குடும்பத்தாரிடம் மீன்பிடி தொழில் குறித்து கேட்டறிந்தார். மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடி, அவர்களது படிப்பு விவரங்களையும் கேட்டறிந்தார். முதல்வர் அவர்களது வீட்டிற்கு வந்ததால் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.