மும்பை விரையும் முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மும்பை செல்கிறார்.
மு.க.ஸ்டாலின்
இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது. தென் முனையான கன்னியாகுமரியில் இருந்து வடக்கு எல்லையான காஷ்மீர் வரை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து 2ம் கட்ட பயணத்தை கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் வழியாக, சுமார் 6,700 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 63 நாட்கள் பயணம் செய்தார்.
மகாராஷ்டிரா தானேவில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் யாத்திரையை இன்று நிறைவு செய்கிறார். இதனால், பிரமாண்ட விழாவுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மும்பை பயணம்
இதற்காக, டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தியின் யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்பதுடன், இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசவுள்ளார்.
மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. ந்தியா கூட்டணியின் முதல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் என்பதால் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.