விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு!
நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாக்குசேகரிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோ
இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விக்கிரவாண்டி மக்கள் அனைவர்க்கும் எனது அன்பான வணக்கம். வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவாவிற்கு வாக்களிக்கணும் என அன்போட கேட்கிறேன்.
இந்தியா கூட்டணியில் போட்டியிடும் சிவாவை தனியாக அறிமுகப்படுத்த தேவையில்லை. 1986ஆம் ஆண்டு முதல் அவரை நான் பார்க்கிறேன். தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளின் ஒருவர்.
விழுப்புரம் கானை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளரா, ஒன்றுப்பட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினரா, அன்னியூர் கூட்டுறவு விவசாய சங்க தலைவரா, மாநில விவசாய அணி துணை செயலரா இருந்தவர் தற்போது விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளரா இருக்கிறார்.
திட்டங்கள்...
அவரை விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுங்கள். அன்போடு மட்டுமில்ல உரிமையோடு கேட்கிறேன். 3 ஆண்டு ஆட்சியில் நலத்திட்டங்களை சொல்ல நேரம் போதாது. மகளிர் உரிமை தொகை இன்னும் அதிகரித்து வழங்கப்படுகிறது.
சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் @arivalayam-த்தின் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திரு. அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!#VikravandiByElection #Vote4DMK pic.twitter.com/Oil1HPF5eH
— M.K.Stalin (@mkstalin) July 5, 2024
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் வருகிறது. அனைத்து குடும்பத்திற்கும் எதாவது ஒரு திட்டம் வழங்கப்படுகிறது. வன்னியர்களுக்கு 20% கொடுத்தவர் கலைஞர். 1987-ஆம் ஆண்டில் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
அமைச்சர் பொன்முடி, மறைந்த புகழேந்தி மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் ஏராளமான திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். சமூகநீதி முலமாக பாஜகவை தோற்கடித்து தக்கப்பாடம் புகட்ட கேட்டுக்கொள்கிறேன்.