3 மாநில தேர்தல் எதிரொலி..இந்தியா கூட்டணி எதிர்காலம்..! முதல்வர் பதில்..!

M K Stalin Tamil nadu DMK India
By Karthick Dec 16, 2023 03:25 PM GMT
Report

நடைபெற்று முடிந்த ராஜஸ்தான், சட்டிஸ்கர், மத்திய பிரதேச என 3 மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு 4 மாவட்ட மழை வெள்ள பாதிப்பு, 3 மாநில தேர்தல் முடிவுகள் போன்றவற்றை குறித்து பதிலளித்துள்ளார். அந்த கேள்வி - பதில்கள் வருமாறு.

mk-stalin-views-on-3-state-election-result

கேள்வி - சேதத்தைப் பார்வையிட வந்த மத்திய நிபுணர்கள் குழு தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகத்தான் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.ஆனால் நிவாரணப் பணிகள் குறித்து அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவை ஒருபுறம் இருக்க நிவாரணப் பணிகள் உங்களுக்குத் திருப்தியை அளிக்கின்றனவா? இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

mk-stalin-views-on-3-state-election-result

முதல்வர் முக ஸ்டாலின் பதில் - மத்திய அரசின் குழு தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக வரவேற்றுப் பாராட்டி இருக்கிறது. உரிய நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது, அதற்காக இந்த அரசை நாங்கள் பாராட்டுகிறோம்; என்று மத்தியக் குழு பாராட்டி இருக்கிறது என்றும் இதே கருத்தை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் என்னைச் சந்தித்தபோது தெரிவித்தார்கள்.

மத்திய பாஜக அரசுக்கும் எங்களுக்குமான அரசியல் ரீதியாக கொள்கை முரண்பாடுகள் இருந்தும் அதனை தாண்டி இந்தளவுக்குப் பாராட்டுகிறார்கள் என்றால், தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகள் தான் இதற்குக் காரணம்.

ஆளுநர் விவகாரம்

கேள்வி - முதல்வராகிய நீங்களும் ஆளுநரும் கலந்து பேசி, நிர்வாகத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளைப் போக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆளுநர் உங்களை அழைத்திருக்கிறார். அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை இது களையும் என்று நம்புகிறீர்களா?

முதல்வர் முக ஸ்டாலின் பதில் - பல முறை ஆளுநர் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு அவரை நான் சந்தித்து பேசி இருக்கிறேன். அரசு விழாக்களிலும் பல முறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார் – பேசினார்.

mk-stalin-views-on-3-state-election-result

எனவே, நாங்கள் இருவரும் சந்திப்பது பிரச்னை அல்ல .தமிழ்நாட்டின் நன்மைக்காக மனம் மாறி ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டு மக்களுக்கும், சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இந்தியா கூட்டணி விவகாரம்

கேள்வி - மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்?

நிவாரணமாக 10 ஆயிரம் வழங்கவேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்..!

நிவாரணமாக 10 ஆயிரம் வழங்கவேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்..!

முதல்வர் முக ஸ்டாலின் பதில் - மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தான். நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது. மாநிலப் பிரச்னைகள்தான் சட்டமன்றத் தேர்தலின் போது பொதுவான தலைதூக்கிக் காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுக்குக் காரணம் ஆகும். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர்தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான்.

mk-stalin-views-on-3-state-election-result

மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பாஜக பெற்றுள்ளது. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தால் இம்மாநில சட்டமன்ற வெற்றியை பாஜக பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை "இந்தியா கூட்டணி" செய்து நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை பெறுவோம். மூன்று மாநிலத் தேர்தல் முடிவைப் படிப்பினையாகவே நாங்கள் பார்க்கிறோம்.