தலைசிறந்த மூன்றாண்டு - தலைநிமிர்ந்த தமிழ்நாடு பெருமிதத்துடன் முதலமைச்சர் முக ஸ்டாலின்!!

M K Stalin Tamil nadu DMK
By Karthick May 07, 2024 05:37 AM GMT
Report

திமுக அரசு இன்றுடன் 3 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்கிறது.

திமுக ஆட்சி

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 132 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

chief minister of tamilnadu MK stalin

இன்றுடன் 3 ஆண்டு ஆட்சி நிறைவு பெரும் நிலையில், அது குறித்து வீடியோ ஒன்றை முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

40 தொகுதியிலும் நாம் தான்- முதலமைச்சர் முக ஸ்டாலின் நம்பிக்கை

40 தொகுதியிலும் நாம் தான்- முதலமைச்சர் முக ஸ்டாலின் நம்பிக்கை

முதலமைச்சர் பெருமிதம்

இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!" மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது! நம்பிக்கையோடு முன்செல்கிறேன்... பெருமையோடு சொல்கிறேன்... "தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!" என தலைப்பிட்டு சுமார் 4 நிமிட வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

mk stalin video in 3 years dmk rule completion

அவ்வீடியோவில், நான் உங்கள் நல்ஆதரவையும், நம்பிக்கையும் பெற்று நம் மாநிலத்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்று மூன்று ஆண்டு நிறைவுபெற்று 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாள் மே 7. இந்த 3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்னென்னு தினந்தோறும் பயன் அடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி. திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்றத விட பயன் அடைந்த மக்கள் சொல்வது தான் உண்மையான பாராட்டு.

mk stalin video in 3 years dmk rule completion

அதனை தொடர்ந்து திமுக அரசின் திட்டத்தால் பயனடைந்த மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் உளப்பூர்வமான வாழ்த்து.ஸ்டாலின் என்றால் உழைப்பு -உழைப்பு -உழைப்பு'ன்னு சொன்னாரு எங்களையெல்லாம் ஆளாக்கிய அன்பு தலைவர் கலைஞர். இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல் - செயல் - செயல்'ன்னு நிரூபித்து காட்டியுள்ளேன்.

எப்போதும் நான் சொல்றது இது என்னோட அரசு அல்ல நமது அரசு. அந்த வகையில் நமது அரசு 4-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நாடும், மாநிலமும் பயன்பெற எந்நாளும் உழைப்பேன் என்று உறுதியேற்று ஆட்சிப்பயணத்தை உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்வேன் என அந்த வீடியோவில் முதலமைச்சர் பேசியுள்ளார்.