40 தொகுதியிலும் நாம் தான்- முதலமைச்சர் முக ஸ்டாலின் நம்பிக்கை
40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி பொறுப்பாளர்களுடன் காணொளி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தொகுதிவாரியாக, "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டங்கள் பெரும் வெற்றி என அவர் தெரிவித்தார்.
இதனை சிறப்பாக ஏற்பாடு செய்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் கூறிய அவர், இக்கூட்டங்கள் மாநிலம் முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன என்று தெரிவித்தார்.
40 தொகுதியிலும்..
தேர்தல் பணிகளில் நாம் வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்து, 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் நம்பிக்கை கூறி, பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும் என தொகுதி பொறுப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் .