மீனவர் பிரச்சனை; பிரதமர் மோடி பேசியது நம்பிக்கை அளிக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அதிபரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அதிபர்
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயகா 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று (15.12.2024) இந்தியா வந்தார். இன்று(16.12.2024) காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே சந்தித்து பேசினார்.
பிரதமருடன் சந்திப்பு
இந்த சந்திப்பின் போது, இந்தியா, இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது, மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக, "மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். மீனவர் பிரச்சினை இரு நாடுகளுக்கு தலைவலியாகி விட்டது.
முதல்வர் ஸ்டாலின்
இரு நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். சுருக்குமடிவலை பயன்படுத்துவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே சுருக்குமடிவலை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசினார்.
It is encouraging that the Hon’ble President of Sri Lanka, @anuradisanayake, is engaging in discussions with our Hon’ble Prime Minister @narendramodi, to address the concerns of Tamil fishermen in a humanitarian and peaceful manner, emphasising the need to avoid of conflict.
— M.K.Stalin (@mkstalin) December 16, 2024
I… https://t.co/APsKZ7cjHb
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இலங்கை அதிபர் விடுவிக்க வேண்டுகிறேன். இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர திசநாயக்கவிடம், மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசி இருப்பது நம்பிக்கை அளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.