இது நமது வெற்றியல்ல..!! மணி மகுடம்..! ,முதல்வர் முக ஸ்டாலின் ட்வீட்!!

M K Stalin Tamil nadu DMK
By Karthick Nov 07, 2023 10:02 AM GMT
Report

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இரு வேறு செய்திகளை மேற்கோள் காட்டி இது நமது மணிமகுடம் என பெருமிதம் தெரிவித்துள்ளார்

முதல்வர் ட்வீட்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த வாரம் ஊடகங்களில் வெளியான இரு செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்... கல்வியும், மருத்துவமும்தான் DravidianModel-இன் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு.

mk-stalin-tweet-about-naan-mudalvan-thittam

அதனை மெய்ப்பிக்கும் வகையிலான செய்தி 1: நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 3300 அரசுப் பள்ளி மாணவர்கள் CLAT தேர்வெழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணம் நான்காயிரம் ரூபாயை அரசே செலுத்தி, அவர்களுக்கு இலவசப் பயிற்சியையும் வழங்கவுள்ளது.

முதலமைச்சருக்கு ப்ளூ வகை பாதிப்பு உள்ளது - அமைச்சர் கொடுத்த அப்டேட்!

முதலமைச்சருக்கு ப்ளூ வகை பாதிப்பு உள்ளது - அமைச்சர் கொடுத்த அப்டேட்!


நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசின் உயர் பொறுப்புகளிலும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக நாம் மேற்கொண்டு வரும் பல திட்டங்களில் ஒரு சிறுதுளிதான் இது.

இது நமது வெற்றியல்ல..!! மணி மகுடம்..! ,முதல்வர் முக ஸ்டாலின் ட்வீட்!! | Mk Stalin Tweet About Naan Mudalvan Thittam

செய்தி 2: நாட்டிற்கே முன்னோடியாக 2009-இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வழிகாட்டினார். 2015-16-இல்தான் ஒன்றிய அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது CMCHIS-இல் நமது அரசு மருத்துவமனைகள் இந்தியாவிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளன.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் பயனைடைந்தவர்களில் 50 விழுக்காட்டினர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது நமது கல்வி, மருத்துவத் துறைகளின் சாதனைகளுக்கான சான்று மட்டுமல்ல; வெற்றி மணிமகுடம்!