முதலமைச்சருக்கு ப்ளூ வகை பாதிப்பு உள்ளது - அமைச்சர் கொடுத்த அப்டேட்!

M. K. Stalin Ma. Subramanian
By Sumathi Nov 07, 2023 08:25 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் உடல்நிலை

தேனாம்பேட்டை, பொது சுகாதாரத்துறை இயக்குனகரத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா 2.0 , திட்டங்களை புதுப்பித்து தொடங்கும் நிகழ்வு நடைபெற்றது.

cm stalin health condition

இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அமைச்சர் தகவல்

முதல் குழந்தையாக இருந்தாலும் இரண்டாம் குழந்தையாக இருந்தாலும் 18 ஆயிரம் முழுவதும் வழங்கப்படும். இதுவரை 10,529 கோடி மதிப்பீட்டில் 1.16 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தற்போது 44 லட்சம் மதிப்பீட்டில் 1,06,766 பேர் புதிதாக பயனடைய உள்ளனர்.

minister-masubramanian

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், 2018ம் ஆண்டு முதல் விடப்பட்ட பயனாளிகள் கணக்கெடுத்து, உதவித்தொகை விரைவில் வழங்கப்படும். உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் துணை சுகாதார அலுவலகத்தில் அல்லது 104 என்ற எண்ணில் முறையிடலாம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு.. போன் காலில் வந்த மிரட்டல் - பரபரப்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு.. போன் காலில் வந்த மிரட்டல் - பரபரப்பு!

முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் மருத்துவ ஓய்வில் இருந்து வருகிறார். மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ப்ளு வகையான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார். நலமுடன் உள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக குணமடைவார் எனத் தெரிவித்துள்ளார்.