வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu
By Jiyath Oct 29, 2023 02:10 AM GMT
Report

வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

நூற்றாண்டு விழா

டி.எஸ். சீனிவாசன் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது "டிவிஎஸ் என்ற மூன்றெழுத்தின் நிறுவனத்தை வாழ்த்த திமுக என்ற மூன்றெழுத்தின் தலைவர் வந்திருக்கிறேன்.

வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! | If Heirs Talented Anything Can Achieved M K Stalin

டிவிஎஸ் முக்கிய நிறுவனம் என்பதை யாரும் மறைக்க முடியாது. இன்று இருசக்கர வானங்கள் எது வந்தாலும், ஏழை எளிய மக்களின் வாகனமாக திகழ்ந்தது டிவிஎஸ் தான். வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் திகழ்கின்றனர். வாரிசு என்றதும், ஏதோ அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம்.

மு.க. ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர்களின் மீது அக்கறை கொண்டவராக விளங்கினார் டி.எஸ்.சீனிவாசன். வேளாண்டை, சுற்றுச்சூழல், கல்வி என பல துறைகளில் டிவிஎஸ் நிறுவனம் சேவையாற்றி வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே எங்களது இலக்கு.

வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! | If Heirs Talented Anything Can Achieved M K Stalin

தொழில்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை பெரிய அளவிற்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வேணு சீனிவாசன் பொறுப்பு ஏற்று பணியாற்ற வேண்டும். நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு இதுவரை ரூ.150 கோடி நிதி வந்துள்ளது" என்று பேசினார்.