பட்ஜெட்டில் இது தான் தமிழகத்தின் எதிர்பார்ப்பு !! லிஸ்ட் போட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Smt Nirmala Sitharaman Tamil nadu Narendra Modi Chief Minister of Tamil Nadu
By Karthick Jul 21, 2024 05:36 AM GMT
Report

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மீண்டும் பாஜக 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.  நாட்டின் பட்ஜெட் தாக்கல்  நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதனை தாக்கல் செய்யவுள்ளார்.

NIrmala seetharaman budget 2024

பலரும் பட்ஜெட்டில் எந்த மாதிரியான விஷயங்கள் இடம்பெறும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள #Budget2024-இல்,

தயாநிதி மாறன் ஜனநாயக முறையை மீறி வெற்றி பெற்றுள்ளார் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தயாநிதி மாறன் ஜனநாயக முறையை மீறி வெற்றி பெற்றுள்ளார் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

🚆 மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் #ChennaiMetroRail திட்டத்திற்கான நிதி

🛣️ தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்

MK stalin

🧑‍🧑‍🧒‍🧒 பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு

🚄 கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்

🛤️ தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு

 🏡 கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல்

உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சரின் சமூகவலைத்தள பதிவில், பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.