தயாநிதி மாறன் ஜனநாயக முறையை மீறி வெற்றி பெற்றுள்ளார் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னையின் நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றான மத்திய சென்னையில் திமுகவின் வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக
வெற்றி நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலின் முடிவுகள் ஜூன் 6-ஆம் தேதி வெளியானது. தமிழகம் மற்றும் புதுவை மொத்தமாக திமுக கூட்டணிக்கு சாதகமாகவே அமைந்து போனது. போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் இதில் 22 இடங்களில் திமுக, 9 இடங்களில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் தலா 2 இடங்களிலும், மதிமுக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் 1 இடத்திலும் போட்டியிட்டுருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 23 இடத்திலும், பாமக 10, தமிழ் மாநில காங்கிரஸ் 3, அமமுக 2, சுயேட்சையாக ஓபிஎஸ் 1 இடத்திலும், அதிமுக கூட்டணியில் அதிமுக 34 இடத்திலும், தேமுதிக 5 இடத்திலும் போட்டியிட்டன. சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் ஒன்றான மத்திய சென்னையில் திமுகவின் வேட்பாளராக மீண்டும் களமிறங்கினார் தயாநிதி மாறன்.
திமுக கூட்டணி 40/40 வெற்றி வெற்றி செல்லாது - ஓபிஎஸ் - நயினார் - விஜயபிரபாகரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
அவர் 4,13,848 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதே தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சியின் சார்பில் எம்.எல்.ரவி 696 வாக்குகளை பெற்றிருந்தார்.
வழக்கு
இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாநிதி மாறனின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவரின் மனுவில் ஏப்ரல் 17-ஆம் தேதியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த போதும், வேட்பாளரான தயாநிதி மாறனின் சார்பில் வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ஆம் தேதி பத்திரிகைகளில் விளம்பரம் அளிக்கப்பட்டிருந்தது.
இது ஜனநாயக முறைப்படி தேர்தலில் வாக்காளர்களை திசை திரும்பும் செயல் என்பது மட்டுமின்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கும் எதிரானது என்றும் தேர்தல் பிரச்சாரம் - விளம்பர செலவு, பூத் ஏஜெண்டுகளுக்காக செலவிட்ட தொகை போன்றவற்றை முறையாக தெரிவிக்கவில்லை.
அனுமதிக்கப்பட்ட ரூ.95 லட்சத்திற்கும் அதிகப்படியான தொகையை அவர் செலவிட்டுள்ளார் என சுட்டிக்காட்டி, இந்த தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறவில்லை. ஆகையால், தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.