திமுக கூட்டணி 40/40 வெற்றி வெற்றி செல்லாது - ஓபிஎஸ் - நயினார் - விஜயபிரபாகரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40/40 - தமிழகம், புதுவையை சேர்த்து வெற்றி பெற்றுள்ளது.
திமுக வெற்றி
ஜூன் 6-ஆம் தேதி வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் மொத்தமாக திமுக கூட்டணிக்கு சாதகமாகவே அமைந்து போனது. போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் இதில் 22 இடங்களில் திமுக, 9 இடங்களில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் தலா 2 இடங்களிலும், மதிமுக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் 1 இடத்திலும் போட்டியிட்டுருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 23 இடத்திலும், பாமக 10, தமிழ் மாநில காங்கிரஸ் 3, அமமுக 2, சுயேட்சையாக ஓபிஎஸ் 1 இடத்திலும், அதிமுக கூட்டணியில் அதிமுக 34 இடத்திலும், தேமுதிக 5 இடத்திலும் போட்டியிட்டன.
வழக்கு
தேர்தலில் தோல்வியடைந்ததில் அதிருப்தி வெளிப்படுத்திய தேமுதிகவின் விருதுநகர் வேட்பாளர் விஜயபிரபாகரன் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்திருந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். விஜயபிரபாகரன் தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாளை தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்ய காலக்கெடு முடிவடையும் நிலையில், ராமநாதபுர தொகுதி சுயேச்சை - பாஜக வேட்பாளர் ஓபிஎஸ் தரப்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து திருநெல்வேலியில் தோல்வியடைந்த பாஜகவின் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் வந்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
- விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விஜயபிரபாகரன் 4379 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தார். மாணிக்கம் தாகூர் - 385256 வாக்குகள், விஜயபிரபாகரன் - 380877 வாக்குகள்.
- ராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி - 509664 வாக்குகள், ஓபிஎஸ் - 342882 பெற்றார். வித்தியாசம் 166782 வாக்குகள் ஆகும்.
-
திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் - 502296 வாக்குகள், நயினார் நாகேந்திரன் - 336676 வாக்குகள். வித்தியாசம் 165620 வாக்குகள்.
இந்த வழக்கின் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.